எரிவாயு கொள்கலன் வெடிப்பு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
இலங்கையின் பல்வேறு இடங்களில் ஏற்படும் எரிவாயு கொள்கலன்களின் ஏற்படும் வெடிப்பு தொடர்பில் நாடாளுமன்ற தொிவுக்குழு ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
எதிர்கட்சியின் உறுப்பினர்கள் இது தொடர்பில் இன்று ஆளும் கட்சியிடம் நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பினர்
இதுவரை இலங்கையில் 6 எரிவாயு கொள்கலன்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. எரிவாயு கொள்கலன் வெடிப்பு சம்பவம் ஒன்றில் யுவதி ஒருவரும் பலியாகியுள்ளார் என்பதை எதிர்கட்சி சுட்டிக்காட்டியது.
இதன்போது பதில் வழங்கிய ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, இந்த பிரச்சினை தொடர்பில் இன்று மாலையில் நிபுணர் அறிக்கை ஒன்றை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
அத்துடன் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் உதவி ஒன்றையும் தாம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில் எதிர்வரும் திங்கட்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தாம் இது தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளதாக லசந்த அழகியவன்ன குறிப்பிட்டார்.

களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri