வைத்தியசாலைக்குள் அதிகாலையில் நடந்த பயங்கர விபத்து.. சுகாதார ஊழியர் ஒருவர் பலி
புதிய இணைப்பு
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறையில் ஏற்பட்ட வெடிவிபத்தைத் தொடர்ந்து படுகாயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்த 36 வயதான சுகாதார உதவியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
பொலன்னறுவை தேசிய சிறுநீரக மருத்துவமனையின் சமையலறை வளாகத்தில் நடந்த வெடிப்புச் சம்பவம் குறித்து விசாரிக்க இரண்டு பொலிஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவும் இச்சம்பவம் குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் யாருக்கும் வெடிவிபத்தில் பாதிப்பு ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று (26) அதிகாலை 4 மணியளவில் மருத்துவமனையின் சமையலறை வளாகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்த ஏழு பேரில் மூவர் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையின் பிரதான சமையலறையில் ஏற்பட்ட எரிவாயுக் கசிவு மற்றும் எரிவாயு உருளை வெடிப்பு காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது, மேலும் இதுகுறித்த விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

முதலாம் இணைப்பு
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலையின் சமையலறையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வைத்தியசாலையில் அனுமதி
இந்நிலையில் குறித்த விபத்தில் காயமடைந்த சிறுநீரக வைத்தியசாலை ஊழியர்கள் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வெடிப்பு சம்பவம் காரணமாக வைத்தியசாலை கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதியின் பயணத்திற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் உலங்குவானூர்தி தொடர்பில் வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல்கள்..
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri