ராஜபக்ச உள்ளிட்ட சக்திவாய்ந்த அரசியல்வாதிகளின் இரகசிய ஆயுதம்.. அம்பலமாகும் அதிர்ச்சி உண்மைகள்
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டது ஒரு தனிநபரை ஒழிப்பதற்காக மட்டுமல்ல என இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள், ஊழல் மற்றும் சக்திவாய்ந்த பிரமுகர்களை எதிர்க்கத் துணியும் பிற ஊடகவியலாளர்கள் மற்றும் தொழில்முறை வல்லுநர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காகவே அவர் படுகொலை செய்யப்பட்டார் என்று ரங்க திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
லசந்த பற்றிய புத்தகத்தின் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழாவில் உரையாற்றிய அவர், லசந்தவின் படுகொலை ஊடகவியலாளர்களுக்கு ஒரு தெளிவான செய்தியைக் கடத்தியதாக அவர் கூறியுள்ளார்.
கடுமையான அச்சுறுத்தல்..
அதாவது, "எல்லைக்குட்பட்டு இயங்குங்கள், அதிகாரத்தில் உள்ளவர்களை எதிர்க்காமல் செய்தி வெளியிடுங்கள், வித்தியாசமாகச் செயல்பட முயற்சிக்காதீர்கள்" என்பதே அந்தச் செய்தியாகும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை வரலாற்றில் ஊழல் அல்லது அதிகார மையங்களை எதிர்த்தவர்களுக்கு இதுபோன்ற பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன, பேராசிரியர் சேனக்க பிபிலே மற்றும் சுங்க அதிகாரி சுஜித் பிரசன்னா ஆகியோரின் சம்பவங்களும் இதற்கு உதாரணம்.
ஒருவரைத் தாக்குவது அவரது சக ஊழியர்களையும் மற்றவர்களையும் இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவதிலிருந்து தடுக்கும், தவறுகளை எதிர்ப்பதற்காக உயிரைப் பணயம் வைப்பது மதிப்புள்ளதா என்று குடும்பங்களும் சக ஊழியர்களும் யோசிக்கும் நிலை ஏற்படும்.
சுங்க அதிகாரியின் படுகொலைக்குப் பிறகு பல அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறியதையும் அல்லது விசாரணைகளைத் தொடரத் தயங்கியதையும் எம்மால் மறக்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ஆட்சியில் நடந்த கொடூரம் - ஜனாதிபதி தேர்தலில் பாரிய மோசடி - நள்ளிரவில் சிறை பிடிக்கப்பட்ட ஆணையாளர்
உயிர்த்த ஞாயிறு வழக்குத் தீர்ப்பு : மறைக்கப்பட்ட பல சர்ச்சைக்குரிய தகவல்களை அம்பலப்படுத்தும் புலனாய்வாளர்....
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri