க.பொ.த சாதாரண தர பரீட்சையின் மீள்பரிசீலனை செய்யப்பட்ட பெறுபேறுகள் வெளியாகின..
2025 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையின் மீள்பரிசீலனை செய்யப்பட்ட முடிவுகள் இன்று (26) வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk க்குச் சென்று, பரீட்சை எண் அல்லது தேசிய அடையாள அட்டை எண்ணை உள்ளிடுவதன் மூலம் முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
இந்த பரீட்சை முடிவுகள் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், இலங்கைத் பரீட்சைகள் திணைக்களத்தின் பண்டித பரீட்சைகள் அமைப்பு மற்றும் முடிவுகள் பிரிவின் '1911' என்ற ஹொட்லைன் எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
நீங்கள் பின்வரும் எண்களுக்கும் அழைக்கலாம்:
0112 784208, 0112-784537 மற்றும் 0112-785922
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri