இலங்கையில் மற்றுமொரு இடத்தில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு
இலங்கையில் மற்றுமொரு இடத்தில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
நிக்கவெரட்டிய, கந்தேகெதரவில் உள்ள வீடொன்றிலேயே சந்தேகத்திற்கிடமான எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக குறித்த வீடு பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
சம்பவத்தின் போது வீட்டின் தாயும் தந்தையும்,பிள்ளைகளும் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தமை காரணமாக எவரும் பாதிக்கப்படவில்லை.
இந்தநிலையில் சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நிக்கவெரட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த ஒரு மாதத்தில் நாட்டில் இடம்பெற்ற ஐந்தாவது சிலிண்டர் வெடிப்பு சம்பவம் இது என்பது குறிப்பிட்டுள்ளது.
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri