இலங்கையில் தொடரும் எரிவாயு வெடிப்பு சம்பவம்! இலங்கை தர நிர்ணய நிறுவகம் விளக்கம்
இலங்கையில் ஏற்பட்டு வரும் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை தர நிர்ணய நிறுவகம் பதில் வழங்கியுள்ளது.
அதில் தமது நிறுவகம் எரிவாயுக் கொள்கலன்களின் வால்வுகள்,ரெகுலேட்டர் மற்றும் இணைப்புக்குழாய் என்பவற்றை கண்காணிப்பதற்கான அதிகாரம் தமக்கு இல்லை என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சித்திகா சேனாரட்ன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கொள்கலன்களின் குறித்த இணைப்பு பொருட்களை கண்காணிப்பு செய்வது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை தமக்கு அங்கீகாரம் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
எனவே அந்த கொள்கலன் இணைப்பு பொருட்களின் தரநிர்ணயத்தை கண்காணிக்க வேண்டியது நுகர்வோர் அதிகார சபைக்கு உள்ள பொறுப்பாகும் என்று கலாநிதி சித்திகா சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.
எரிவாயு சிலிண்டரின் வாயு அடர்த்தி தொடர்பில் தர நிர்ணயங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உலகின் அநேக நாடுகளில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிவாயு சிலிண்டர், வால்வு உள்ளிட்ட தொடர்புடைய பொருட்கள் குறித்து சில தரநிர்ணயங்கள் தன்னார்வ அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், சட்ட ரீதியாக கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரம் இலங்கை தர நிர்ணய நிறுவகத்திற்கு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய நாட்களில் எரிவாயு கசிவு காரணமாகவே வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் எரிவாயு கொள்கலன்கள் வெடிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan