“எரிவாயு கொள்கலன் வெடிப்புகளில் நடக்கும் சூழ்ச்சிகள்”
ஒரு சூழ்ச்சியின் பிரதிபலனாகவே தற்போது எரிவாயு கசிவினால் ஏற்படும் வெடிப்புகள், தீப்பரவல்கள் என்பன நடப்பதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் (Asela Sampath) தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இது மிகவும் பாரதூரமான பிரச்சினை என்பதால், தொடர்ந்தும் வீடுகள், உணவகங்கள் அல்லது பொது சொத்துக்கு சேதம் ஏற்பட்டால், எதிர்காலத்தில் நடப்பவற்றை அரசாங்கம் காணமுடியும். .
இதனால், இந்த பிரச்சினையை அரசாங்கம் உடனடியாக தீர்க்க வேண்டும். தேசபந்து தென்னகோன் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது. 48 மணி நேரத்திற்குள் இந்த பிரச்சினையை தீர்க்க முடியும்.
இரண்டு வாரங்கள் எதற்கு?. அப்படியானால் இரண்டு வாரங்கள் வெடிப்புச் சம்பவங்கள் நிகழ வேண்டும் அப்போதான் பிரச்சினை உச்சத்திற்கு வரும். இவை எல்லாம் திட்டமிடல்கள்.
ஜனாதிபதி இந்த பிரச்சினை பற்றி உணரவில்லை என்றால், ஜனாதிபதிக்கு பிரித் நூல் கட்டிய, நாட்டின் மாநாயக்க, அநுநாயக்க உட்பட பிக்குமாருக்கு தானம் கிடைக்காது என்பதை கூற விரும்புகிறேன்.
வீடுகளில் எரிவாயு கொள்கலன்கள் வெடிக்கின்றன. மாகல்கந்தே சுதத்த, இத்தே கந்தே, மெடில்லே போன்ற வொயிஸ் கட் தேரர்கள் தற்போது வீதிக்கு வர வேண்டும். தானம் கிடைக்காது.
சமைப்பதற்கு வழியில்லை. சமையல் எரிவாயு கொள்கலன்கள் வெடித்து சிதறுகின்றன. எரிவாயு கொள்கலன்கள் வெடிக்கின்றன என்பதை எந்த பௌத்த தேரராவது ஜனாதிபதியின் கவனத்துக்கொண்டு சென்றாரா?.
இந்த வெடிப்புச் சம்பவங்களால் ஏற்பட்டுள்ள மரணங்கள், காயங்களுக்கு பந்துல குணவர்தன மற்றும் லசந்த அழகியவண்ண ஆகிய அமைச்சர்கள் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 6 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
