இலங்கையில் எரிவாயு நெருக்கடி! கொழும்பு வாழ் மக்களிடம் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
நாட்டின் பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கு விறகே முக்கிய எரிசக்தி ஆதாரமாக உள்ளதாக மக்கள்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த அறிக்கையின்படி, நாட்டில் உள்ள 55.4% வீடுகள் சமையலுக்கு விறகைப் பயன்படுத்துகின்றன. 42.4% வீடுகள் சமையலுக்கு எரிவாயுவைப் பயன்படுத்துகின்றன.
நாட்டில் உள்ள வீடுகளின் எண்ணிக்கை
2024 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, நாட்டில் உள்ள வீடுகளின் எண்ணிக்கை 6.1 மில்லியனாக உள்ளது. 0.3% வீடுகள் மின்சாரத்தையும், 0.1% வீடுகள் மற்ற ஆதாரங்களையும் சமையலுக்குப் பயன்படுத்துகின்றன.

அதே சமயம், 1.3% மக்களுக்கு சமையலுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், 2012 மக்கள்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பையும் 2024 கணக்கெடுப்பையும் ஒப்பிடும்போது, அனைத்து மாவட்டங்களிலும் விறகின் பயன்பாடு குறைந்து, எரிவாயுவின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
அதன்படி, 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், சமையலுக்கான திரவ பெட்ரோலிய எரிவாயுவின் (LPG) பயன்பாடு 42.4% ஆக அதிகரித்துள்ளது.
விறகு பயன்பாடு அதிகரிப்பு
2012 ஆம் ஆண்டில், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வீடுகளில் விறகு பயன்பாடு 97.5% ஆக மிக அதிகமாக இருந்தது. 2024 ஆம் ஆண்டளவில், மொனராகலை மாவட்டத்தில் விறகு பயன்பாடு 83.6% ஆக மிக அதிகமாக இருந்தது.

இவ்விரு ஆண்டுகளிலும், கொழும்பு மாவட்டத்தில் விறகு பயன்பாடு மிகக் குறைவாக இருந்துள்ளது.
2012 ஆம் ஆண்டில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள வீடுகளில் 28.8% விறகு பயன்படுத்திய போதிலும், 2024 ஆம் ஆண்டளவில், கொழும்பு மாவட்டத்தில் விறகு பயன்பாடு 9.9% ஆக வேகமாக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam