யாழில் குப்பை போடுவதைத் தடுக்க நடராஜர் சிலை வைப்பு!
நல்லூர், பாணாங்குளம் பகுதியில் குப்பை போடுவதைத் தடுக்கும் நோக்குடன், நடராஜர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது.
எனினும், சிலை வைக்கப்பட்ட பின்பும் குப்பை போடப்படுவதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியில் நல்லூர் பாணாங்குளம் அமைந்துள்ளது.
அதனைச் சூழ தொண்டு நிறுவனங்கள் உட்பட பல குடியிருப்புகள் அமைந்துள்ளன.
இந்தப் பகுதிக்கு வெளியில் இருந்து வரும் நபர்களாலேயே குப்பைகள் வீசப்படுவதாக பல தரப்பினரிடமும் முறையிடப்பட்டு, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் குப்பைகள் வீசப்படுவதைத் தடுக்க முடியவில்லை.
அதனால் குப்பைகள் வீசப்படும் இடத்தில் திடீரென நடராஜப் பெருமானின் சிலையொன்று வைக்கப்பட்டது. எனினும், சிலை வைக்கப்பட்ட பின்பும் அந்தப் பகுதியில் குப்பைகள் வீசப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் News Lankasri
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam