கல்லூண்டாயில் பற்றி எரிந்த குப்பை மேடு - விரைந்து சென்ற மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்கள்
கல்லூண்டாய் பகுதியில் அமைந்துள்ள குப்பை மேடானது நேற்று(19) மாலை தீப்பற்றி எரிந்துள்ளது.
வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் அமைந்துள்ள யாழ். மாநகர சபையின் குப்பை மேடே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.
எரிந்த குப்பை மேடு
இது குறித்து மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கு தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் அந்த பகுதிக்கு சென்று நிலைமையை பார்வையிட்டுள்ளனர்.
பின்னர் விரைந்து செயற்பட்டு யாழ். மாநகர சபைக்கு தகவல் தெரிவித்த நிலையில் அங்கு வந்த யாழ். மாநகர சபையின் தண்ணீர் வாகனம் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. பல இடங்களில் பரவலாக தீ வைத்ததால் அமைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

குறித்த பகுதியில் உள்ள குப்பை மேடானது இதற்கு முன்னரும் இவ்வாறு பல தடவைகள் தீப்பற்றி எரிந்துள்ளது.
குறித்த பகுதியில் யாழ். மாநகர சபையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் இருக்கின்ற நிலையில் வெளியில் இருந்து எவரும் உள்ளே செல்வதற்கான வாய்ப்புகளும் இல்லை.
குறித்த குப்பை மேட்டுக்கு அண்மையில் வசிக்கும் மக்களும், கல்லூண்டாய் வீதியால் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற மக்களும் இவ்வாறான சம்பவங்களால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா 6 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார்? வைரலாகும் புகைப்படம் Manithan
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri