காண்போரை நெகிழ்ச்சியடைய செய்யும் குப்பை லொறி
குருநாகலில் குப்பை சேகரிக்கும் லொறி ஒன்று அதன் தனித்துவமான அலங்காரங்களால் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குருநாகல் பிரதேச சபைக்குச் சொந்தமான குப்பை சேகரிக்கும் லொறி ஒன்று, பல்வேறு மென்மையான பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
வீசும் பொருட்கள்
இந்நிலையில், தனது குப்பை லொறியின் தனித்தன்மை காரணமாக பொதுமக்கள் அதை இரண்டு முறை பார்த்து புன்னகைக்க முனைவார்கள் என்று லொறியின் ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
குறித்த குப்பை லொறியின் ஓட்டுநர், "பொதுமக்களால் தூக்கி எறியப்படும் பொம்மைகள் மற்றும் பொருட்களைப் பயன்படுத்தி அந்த லொறி அலங்கரிக்கப்பட்டுள்ளது.
குப்பைகளை சேகரிக்க ஒவ்வொரு முறை சென்று வந்த பின்னரும் லொறி சுத்தம் செய்யப்படுகிறது.
வழக்கமாக குப்பை லொறிகளை விட்டு விலகிச் செல்லும் பொதுமக்கள், இப்போது எங்கள் வாகனத்தைப் பார்த்து புன்னகைக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 21 மணி நேரம் முன்

நெருக்கமானவர் உடன் Vacation சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா.. புகைப்படங்கள் இதோ Cineulagam

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி... அமெரிக்காவின் சக்திவாய்ந்த வெடிகுண்டுக்கு எதிரி நாடு ஒன்றால் சிக்கல் News Lankasri
