தனமல்வில பகுதியில் பெருந்தொகையான கஞ்சா செடிகள் முற்றுகை(Photos)
தனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பிலிபிட்டிய பிரதேசத்தில் காணப்பட்ட கஞ்சா தோட்டங்களை விசேட அதிரடிப்படையினர் இன்று (19.02.2023) முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது அங்கிருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளதாகவும் 8410 கஞ்சா செடிகளை பிடுங்கி அழித்ததுடன் உள்ளூர் தயாரிப்பு ஒன்றை மீட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கதிர்காமம் விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிரடிப்படை கதிர்காம விசேட அதிரடிப்படை அதிகாரி வை.பி.ஏ. சுலோச்சனா தலமையிலான அதிரடிப்படையினர் சம்பவதினமான இன்று அம்பிலிபிட்டிய பிரதேசத்தில் சட்டவிரோதமாக கஞ்சா பயிரிடப்பட்டு வந்த இரண்டு கஞ்சா தோட்டங்களை முற்றுகையிட்டுள்ளனர்.
8410 கஞ்சா செடிகள்
இதனையடுத்து கஞ்சா பயிரிட்டுவந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஒடியதுடன் அங்கிருந்த ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த 5 அடி உயரம் கொண்ட 7600 கஞ்சா செடிகளையும் அடுத்து தோட்டத்தில் 20 பரப்பு நிலப்பரப்பில் பயிரப்பட்டிருந்த 3 அடி உயரம் கொண்ட 810 கஞ்சா செடிகள் உட்பட 8410 செடிகளை பிடுங்கி தீயிட்டு அழித்துள்ளனர்.
அதேவேளை அங்கிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மற்றும் மருந்துக்களை மீட்டு அதிரடிப்படையினர் தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
