கிளிநொச்சி நீதிமன்ற பாதுகாப்பறையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்! மூவருக்கு பயணதடை
கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பறையில் வைக்கப்பட்ட 120 கிலோ கஞ்சா மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களிற்கு முன்னர் இவ்வாறு மாயமாகியுள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து, புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
புதிதாக பொறுப்பெடுத்த சான்றுப் பொருள் களஞ்சியத்திற்கு பொறுப்பான ஊழியர்கள் பூட்டு உடைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பதிவாளருக்கு வழங்கிய தகவலிற்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
பயண தடை
இதன்போதே சான்றுப் பொருட்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, களஞ்சியப் பகுதியிலிருந்து மதுபானங்கள் உள்ளிட்ட அழிக்கப்பட வேண்டிய பொருட்களும் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கொழும்பிலிருந்து விரைந்த விசேட குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
களஞ்சிய பொறுப்பில் இருந்த இருவர் கனடா செல்ல முற்பட்ட நிலையில் அவர்களிற்கான பயண தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், துப்பரவு பணியிலிருந்த பெண் ஒருவர் மத்திய கிழக்கு நாட்டுக்கு செல்ல முற்பட்ட நிலையில் அவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 23 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
