பொய்யான அறிக்கை வழங்கிய சுவிஸ் தூதரக அதிகாரி: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
சுவிஸ் தூதரகத்தின் ஊழியர் கானியா பன்னிஸ்டர் பிரான்சிஸ், தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை நீதிமன்றில் ஒப்புக்கொண்டதையடுத்து இரண்டு வருட கடுங்காவல் சிறை தண்டனையும், ஐந்து வருட பணி இடைநீக்கமும் விதிக்கப்பட்டுள்ளது.
தான் கடத்தப்பட்டதாக பொய்யான அறிக்கையை வழங்கியதாக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் மூலம் குறித்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் போலி வாக்குமூலத்தை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு இவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
பொய்யான முறைப்பாடு
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு மேலதிகமாக, 5,000ரூபா அபராதமும், 20 இலட்சம் ரூபா நட்டஈட்டையும் அரசாங்கத்திற்கு வழங்குமாறும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பண்டார பலாலே உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2019 நவம்பர் 25, அன்று கொழும்பு செயின்ட் பிரிட்ஜெட் கான்வென்ட் அருகே ஆயுதம் தாங்கிய குழுவொன்றினால் வெள்ளை வேனில் தான் கடத்தப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளானதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பொய்யான முறைப்பாட்டைச் சமர்ப்பித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்படமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
