வீதியில் பயணிக்கும் பெண்களின் நகைகளை கொள்ளையடிக்கும் கும்பல் கைது
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பெண்களை அச்சுறுத்தி தங்க நகைகளை கொள்ளையடிக்கும் கும்பலுடன் தொடர்புடையதாக கூறப்படும் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது திருடப்பட்ட சில தங்க நகைகள், வாள், மோட்டார் சைக்கிள் மற்றும் கைக்குண்டு போன்றவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மரதகஹமுல, துனகஹா பகுதியை அண்மித்த கிராமங்களில் உள்ள வீதிகளில் பெண்களை அச்சுறுத்தி தங்க நகைகளை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்பில் திவுலப்பிட்டிய பொலிஸார் விழிப்புடன் செயற்பட்டு வந்துள்ளனர்.

நகைகளை கொள்ளையடிக்கும் கும்பல்
இதன்போது பலியப்பிட்டிய பிரதேசத்தில் இரண்டு தங்க சங்கிலிகளை அறுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பியோடிய இருவரை பொலிஸார் துரத்திச் சென்றுள்ளனர்.
படல்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரகண்டவில பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதில் சந்தேகநபர்கள் இருவரும் பிரதேச மக்களின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மினுவாங்கொடை, ஹொரம்பெல்ல பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்துவந்த மீரிகம ஹல்பே பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும் ஜா அல பிரதேசத்தை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam