தேர்தலுக்கு தயாராகுமாறு ஆணைக்குழு அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அரசாங்க செய்தித் தொடர்பாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் பல நிறுவனங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு விடுத்துள்ளது.
குறிப்பாக இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்து சபை மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகியவற்றிக்கு குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு நிர்ணயித்தால் அதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக அரசாங்க ஊடகப் பணிப்பாளர் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பு நிலையங்கள்
இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள வாக்களிப்பு நிலையங்களின் குறைபாடுகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வழங்குமாறு அனைத்து கிராம உத்தியோகத்தர்களுக்கும் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி தொடக்கம் முதல் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கு இடையில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அனுரகுமார திசாநாயக்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக சஜித் பிரேமதாஸவும் போட்டியிடவுள்ளனர். எனினும் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் யார் போட்டியிடவுள்ளார்கள் என இன்னும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை. எனினும் சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறங்கவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியின் தங்கமகள் சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய நடிகை.. அவருக்கு பதில் இவர்தானா, போட்டோ இதோ Cineulagam

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
