யாழில் பெண்கள் முதியவர்களை இலக்கு வைத்து தொலைபேசி திருடும் கும்பல் கைது (Video)
யாழ் மாவட்டத்தில் கடந்த ஒரு சில மாதங்களாக தனியார் பேருந்துகளில் செல்லும் பெண்கள் முதியவர்களை இலக்கு வைத்து தொலைபேசி திருடும் கும்பலில், புத்தளம் பகுதியைச் சேர்ந்த பிரதான சந்தேக நபரை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், கைதானவரிடம் இருந்து திருடப்பட்ட 9 தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் திருடிய தொலைபேசிகளை வாங்கிய நால்வரும் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு
காரைநகர் - மானிப்பாய் வீதியில் பயணிக்கும் பேருந்துகளில் பயணம் செய்யும் வயது முதிர்ந்தவர்கள் பெண்களின் தொலைபேசிகளை மிகவும் சூட்சுமமான முறையில் திருடி வந்த புத்தளம் பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர், இன்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் உபபரிசோதகர் பிரதீப் தலைமையிலான பொலிஸ் அணியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
மேலும் சந்தேக நபரிடமிருந்து 9 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் கைத்தொலைபேசி தொலைத்தவர்கள் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் உரிய முறைப்பாடுகளை காண்பித்து தொலைபேசிகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
