வவுனியாலில் இளம் குடும்பஸ்தரை கடத்திச் சென்று தாக்கிய கும்பல் - தீவிரப்படுத்தப்படும் விசாரணை
வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டு மூன்று மணி நேரத்தின் பின் விடுவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம நேற்று(08.05.2026) இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்காக நேற்று(08) பிற்பகல் 3 மணியளவில் பேருந்து ஒன்றில் ஏறி தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரிடம் இருந்து முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கைத் தொலைபேசியை பறித்துக் கொண்டு பேருந்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.
3 மணி நேரம் தாக்குதல்
இதன்போது, அங்கு நின்ற முச்சக்கர வண்டி சாரதிகள் சிலர் குறித்த இளம் குடும்பஸ்தரை முச்சக்கர வண்டியில் ஏறுமாறு கூறி ஏற்றிக் கொண்டு வவுனியா, புதிய பேருந்து நிலையத்திற்கும், சோயா வீதிக்கும் இடையிலுள்ள வயல் வெளி பகுதிக்கு அழைத்து சென்று தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், அவர்களால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றில் கையொப்பமும் பெற்றதாகவும், தொலைபேசியில் இருந்த சில ஆவணங்களும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் மாலை 6.30 மணியளவில் தன்னை விடுவித்ததாகவும் பாதிக்கப்பட்ட நபர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு: 36 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தீவிர ஆலோசனை..! தலைகீழாக மாறுமா விஜயின் நிலைமை
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam