யாழில் இளைஞனை கூரிய ஆயுதத்ததால் தாக்கிய கும்பல்
யாழ்ப்பாணம் அச்சுவேலி உளவிக்குளம் ஆலயத்திற்கு முன்பாக கோடாரி வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உளவிக்குளம் ஆலயத்தின் உப தலைவராக செயற்பட்டுவரும் 38 வயதுடைய குறித்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது இன்று (06.06.2024) கோடாரி வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மறைத்தவாறு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் கோடாரி ஒன்றினால் குறித்த இளைஞரை தாக்கியுள்ளனர்
தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் கையில் பலத்த காயத்துக்கு உள்ளாகி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேலைக்கு செல்வதற்காக சென்று கொண்டு இருந்தபோது ஆலயத்திற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் வைத்து வழி மறித்த கும்பல் இளைஞரை சராமாரியாக தாக்கியதில் குறித்த இளைஞன் கைகளில் பலத்த காயம் அடைந்தார்.
இந்நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

வீட்டைவிட்டு கிளம்பும் முன் கோமதிக்காக மீனா செய்த காரியம், ஆனால் செந்தில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam

சீரியல் நாயகர்கள் அனைவரும் ஒரே மேடையில், அமர்க்களமான அரங்கம்... ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முன்னோட்டம் Cineulagam

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam
