மட்டக்களப்பு மக்களால் கணேஸ் என பெயர் சூட்டப்பட்ட யானை உயிரிழப்பு
மட்டக்களப்பு மக்களால் கணேஸ் என பெயர் சூட்டப்பட்ட கொம்பன் யானை உயிருக்கு போராடிய நிலையில் உயிரிழந்துள்ளது.
மட்டக்களப்பு - கிண்ணையடி முருக்கன்தீவில் வசித்துவந்த குறித்த யானை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
அதிகாரிகளின் கவனயீனம்
மேலும், அந்த யானைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பிரதேசவாசிகள் பலமுறை கூறிவந்துள்ளனர்.
எனினும், உரிய நேரத்துக்கு வருகை தராத காரணத்தால் யானை உயிரிழந்துள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கால் உடைந்த யானை
இதேவேளை, புத்தளம் கருவலகஸ்வெவ பகுதியில் காட்டு யானையொன்று கால் உடந்த நிலையில் காணப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்திற்குற்பட்ட கூர்க்கெட்டியாவ பகுதியில் தனியார் ஒருவரின் வயலில் காட்டு யானையொன்று உயிருடன் வீழ்ந்த நிலையில் காணப்படுவதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
30 வயது என மதிப்பிடப்பட்டுள்ள குறித்த யானைக்கு சிகிச்சையளிப்பதற்கு மிருக வைத்தியர் வரவழைக்கப்பட உள்ளதாக
கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினர் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
|