கொழும்பில் சிறப்பாக அனுஷ்டிக்கப்படும் விநாயகர் சதுர்த்தி (VIDEO)
விநாயகரின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி இன்றாகும்.
இந்துக்களினால் அனுஷ்டிக்கப்படும் முக்கிய விரதங்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விநாயகர் ஆலயங்களில் மிகச்சிறப்பான முறையில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விரத உற்சவத்தினை முன்னிட்டு கொழும்பு - வத்தளை இந்து மன்றத்தின் ஏற்பாட்டில் ஹெமில்டன் பூங்கா வளாகத்தில் விசேட பூஜை வழிபாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.
எமது லங்காசிறியின் ஊடக அனுசரனையில் இந்நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வத்தளை இந்து மன்றத்தின் அறிவிப்பு
“31.8.2022 புதன்கிழமை அதிகாலை 4.00 மணி முதல் 5.30 மணிவரையுள்ள பிரம்ம முகூர்த்தத்தில் விநாயகர் பிரதிஷ்டை நடைபெறும். தொடர்ந்து 3.9.2022 வரை தினசரி மாலை 6.30 மணிமுதல் கணபதி ஹோமம், பஜனை, அலங்கார பூஜைகளும் நடைபெறும்.
04.09.2022 ஞாயிற்றுக்கிழமை மு.ப 11 மணிக்கு பூஜைகள் ஆரம்பமாகி பி.ப 02.00 மணிக்கு விநாயகர் இரத பவனியாக காக்கைத் தீவு கடற்கரை பூங்காவை நோக்கி ஊர்வலமாக செல்வதுடன், பின் காக்கைத் தீவு சமுத்திரத்தில் எம்பெருமானின் விக்கிரகம் சங்கமமாகும்.
தொடர்ந்து கடற்கரை பூங்கா திடலில் அன்னதாக நிகழ்வு நடைபெறும்” என வத்தளை இந்து மன்ற ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.








