யாழில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டுள்ள விநாயகர் சதுர்த்தி(Photos)
ஆவணி சதுர்த்தி விநாயகர் விரத உற்சவம் யாழ். மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்து சமயத்தவர்களினால் அனுஷ்டிக்கப்படும் முக்கிய விரதங்களின் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விரத உற்சவம் இன்று யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் ஆலயங்களில் மிகச்சிறப்பான முறையில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
உற்சவ கிரியைகள்
இவ் விநாயகர் சதுர்த்தி விரத உற்சவத்தினை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் திருப்பதி அருள் மிகு ஸ்ரீ வேங்கடேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பான முறையில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
விநாயகர் சதுர்த்திக்கான உற்சவ கிரியைகளை ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சி.விக்கினேஸ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடத்தி வைத்துள்ளனர்.
இதில் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றுள்ளனர்.











