இஷாரா செவ்வந்திக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்ட காணாெளி: திட்டமிடப்பட்ட கொலையின் பின்னணி
நேபாளத்தில் மறைந்திருந்த பாேது இஷாரா செவ்வந்தியின் தாயாரின் இறுதிச் சடங்கை வீடியோவாக பதிவு செய்து வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய இஷாரா செவ்வந்தியின் மாமா பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, அவருக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கைகளும் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கணேமுல்ல சஞ்சீவவின் கொலை ஐந்து பேரால் திட்டமிடப்பட்ட திட்டத்தின் படி நடத்தப்பட்டதாக குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 19 திகதி அளுத்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஐந்து நபர்களால் திட்டமிடப்பட்ட கொலை
இதனைடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் பின்னர் கைது செய்யப்பட்ட நிலையில் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த இஷாரா செவ்வந்தியும் நேபாளத்தில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டார்.
இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய இந்த கொலையை கெஹல்பத்தர பத்மே திட்டமிட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இஷாரா செவ்வந்தியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய கொலை தொடர்பான பல விபரங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் முக்கிய நபராக கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்தா, தரூன், இஷாரா செவ்வந்தி உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam