புதுக்கடை நீதிமன்றத்திற்குள் நடந்த கொலை! எங்கு கோட்டை விட்டது பாதுகாப்புத் துறை

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Ministry of Defense Sri Lanka Gun Shooting
By Sajithra Feb 19, 2025 09:09 PM GMT
Report

முழு நாட்டையும் உலுக்கும் வகையில் கணேமுல்ல சஞ்சீவ, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்டமையானது தேசிய பதுகாப்பினை கேள்விக்குறியாக்கியுள்ளதென பல்வேறு தரப்புகளில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்குள் இன்றைய தினம் (19.02.2025) பாதாள உலக குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ என்பவர் படுகொலை செய்யப்பட்டார். 

இச்சம்பவம், அனைவரின் மத்தியிலும் பெரும் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கையை உலுக்கிய நீதிமன்ற படுகொலை! பெரும் நெருக்கடியில் அநுர அரசு

இலங்கையை உலுக்கிய நீதிமன்ற படுகொலை! பெரும் நெருக்கடியில் அநுர அரசு

பாதுகாப்பு அச்சுறுத்தல் 

புதுக்கடை நீதிமன்றம், அதீத பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்ட மற்றும் மிக முக்கியமான நபராக இருப்பினும் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே உள் நுழைய அனுமதிக்கும் ஒரு இடம். 

புதுக்கடை நீதிமன்றத்திற்குள் நடந்த கொலை! எங்கு கோட்டை விட்டது பாதுகாப்புத் துறை | Ganemulla Sanjeewa Shoot In Court Full Story

இருப்பினும், அங்கு இன்று இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவமானது, அவ்வளவு சாதாரணமான ஒரு விடயமல்ல. இது நாடளாவிய ரீதியில் ஒரு பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ஒன்று. 

தேசிய பாதுகாப்பு தொடர்பான கவனயீனத்தால் ஏற்பட்ட விளைவுகளை கடந்த 2019ஆம் ஆண்டு நாங்கள் அனுபவித்திருக்கின்றோம். கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவங்கள்  அத்தனை எளிதில் மறந்து விடக்கூடிய ஒரு சம்பவங்கள் அல்ல. 

பல உயிர்களை காவு கொண்ட அச்சம்பவத்திற்கு பிறகு நாட்டினதும் நாட்டு மக்களினதும், பாதுகாப்பு என்பது மிக முக்கியமானதொன்றாக கவனிக்கப்பட வேண்டியிருந்தது. 


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 

இருப்பினும், பாதுகாப்புத் துறை, இதனை நிறைவேற்ற தவறி விட்டதா அல்லது சாதாரணமாக எடுத்து கொண்டு விட்டதா என கேள்வி எழுப்பப்படுகின்றது. 

அதேவேளை, நாட்டின் இராணுவ, பொலிஸ் மற்றும் விசேட படையினர், என முழு பாதுகாப்புக்களும் அடங்கிய ஒரு பொது இடமான நீதி மன்ற வளாகத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை இன்னுமே பலத்த விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.  

புதுக்கடை நீதிமன்றத்திற்குள் நடந்த கொலை! எங்கு கோட்டை விட்டது பாதுகாப்புத் துறை | Ganemulla Sanjeewa Shoot In Court Full Story

இந்தநிலைமை பாதுகாப்புத் துறையின் அசமந்த போக்கா அல்லது பாதுகாப்புத் துறை தொடர்பான புதிய அரசாங்கத்தின் கவனயீம் மற்றும் பாதுகாப்புத் துறைசார் விடயங்களில்  இது வரை மக்களின் தேவை குறித்து சிறந்த திட்டமிடல்களை அரசாங்கத்தினர் முன்னெடுக்கவில்லையா என்பது உற்று நோக்கப்பட வேண்டிய விடயம் என சுட்டிக்காட்டப்படுகின்றது. 

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட குறிப்பிட்ட இடங்களில் தாக்குதல்கள்  நடத்தப்பட்டன. 

இச்சம்பவங்களில் ஒன்பது தற்கொலைதாரிகள் ஈடுபட்டதாகவும் இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும், தேசிய தவ்கீத் ஜமாத் என்ற உள்ளூர் அடிப்படைவாத இசுலாமிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும் இலங்கை நீதியமைச்சு அறிவித்திருந்தது. 


தொடர் சம்பவங்கள் 

இதனை தொடர்ந்து, ஊரடங்குச்சட்டம்,  பொது இடங்களில் விசேட படையினரின் கண்காணிப்பு நடவடிக்கைகள் என்பன பலத்த அளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதேசமயம், நாட்டை உலுக்கிய பல்வேறு கொலைச் சம்பவங்கள், பாதாள உலகக் குழுக்களின் அச்சத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் என்பன பல்வேறு தாக்கங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றன. இவ்வாறான பின்னணியில் தேசிய பாதுகாப்பு தொடர்பில்  அதீத கவனம் செலுத்தப்பட வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுபோன்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தையே ஏற்படுத்துகின்றன.

நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நிகழ்த்தப்படுவது இது முதன்முறை அல்ல, நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் சிந்தக அமரசிங்க என்ற ஒருவரை  குறிவைத்து துப்பாக்கிச் சூடு பல வருடங்களுக்கு முன்னர்  இடம்பெற்றுள்ளது. 

புதுக்கடை நீதிமன்றத்திற்குள் நடந்த கொலை! எங்கு கோட்டை விட்டது பாதுகாப்புத் துறை | Ganemulla Sanjeewa Shoot In Court Full Story

இதன் பின்னர்,  புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில், அவரது சகோதரர் தம்மிக்க அமரசிங்க, படுகொலை செய்யப்பட்டார். 

இவ்வாறு நீதிமன்ற வளாகத்திற்குள், நீதிமன்ற சுற்றுச் சூழலுக்குள் பல துப்பாக்கிச் சூடு மற்றும் பல குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்நிலையில், தற்போது, பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவியல் கும்பலின் தலைவருமான "கணேமுல்ல சஞ்சீவ" எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன, இன்று (19) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 


சட்ட புத்தகம் 

இந்த கொலை தாக்குதலை மேற்கொண்ட நபர், வழக்கறிஞர் வேடத்தில் நீதிமன்றத்தில் உள்நுழைந்துள்ளதாகவும் துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை, ஒரு புத்தகத்திற்குள், துப்பாக்கியின் வடிவத்தில் பக்கங்கள் வெட்டப்பட்டு   அதனுள் மறைத்தபடியே நீதிமன்ற வளாகத்திற்குள் எடுத்து வரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

புதுக்கடை நீதிமன்றத்திற்குள் நடந்த கொலை! எங்கு கோட்டை விட்டது பாதுகாப்புத் துறை | Ganemulla Sanjeewa Shoot In Court Full Story

அத்துடன், துப்பாக்கிதாரி இந்த தந்திரோபாய தாக்குதலிற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் புத்தகத்தை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதற்கமைய, சந்தேக நபர் ஒரு வழக்கறிஞராக மாறுவேடமிட்டு நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதைக் காட்டும் சிசிரிவி காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன. இதனை உண்மையில் ஒரு சினிமா பாணியில் இடம்பெற்ற திட்டமிட்ட கொலை சம்பவம் என்றும் கூட சொல்லலாம்.  

மேலும், கொலை செய்த நபருடன் மற்றொரு பெண்ணும் வந்ததாகவும் அவரும் வழக்கறிஞர் போல் உடையணிந்து நீதிமன்ற வளாகத்திற்குள் வந்துள்ளதாக பொலிஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான சஞ்சீவவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாத பாதுகாப்பு தரப்பினர்

துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான சஞ்சீவவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாத பாதுகாப்பு தரப்பினர்

வரவு - செலவுத் திட்டம் 

இந்நிலையில், இந்த சம்பம் குறித்தும் நாட்டில் தொடர்ந்து இடம்பெற்று வரும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களினால் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள மக்களின் பாதுகாப்பு குறித்தும் வினவப்பட்ட போதிலும், பாதுகாப்பு அமைச்சு தரப்பிலிருந்து தெளிவான பதில்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. இது சாதாரண மக்களை மேலும் அச்சத்திற்குள்ளாக்குகின்றது. 

புதுக்கடை நீதிமன்றத்திற்குள் நடந்த கொலை! எங்கு கோட்டை விட்டது பாதுகாப்புத் துறை | Ganemulla Sanjeewa Shoot In Court Full Story

இலங்கையர்கள் யாருக்கும் எங்கும் சுதந்திரமாக செல்லமுடியும் என அமைச்சரவை அமைச்சர் ஒருவர் கூறிய சிறிது நேரத்தில் கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்ற இந்த  துப்பாக்கிச்சூட்டு விவகாரமானது தற்போதைய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான போக்கை எடுத்துக்காட்டுவதாாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சபையில் தெரிவித்துள்ளார். 

அது தவிர எதிர்க்கட்சி எம்.பிக்கள் பலரும் தங்களது அதிருப்தியை வெளியிட்டதுடன், தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தை கேள்வி எழுப்புகின்றன.

புதுக்கடை நீதிமன்றத்திற்குள் நடந்த கொலை! எங்கு கோட்டை விட்டது பாதுகாப்புத் துறை | Ganemulla Sanjeewa Shoot In Court Full Story

மேலும், அனைத்து பாதுகாப்புக்களும் அடங்கிய நீதிமன்ற வளாகத்திலேயே இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளதெனின் சாதாரண வாழ்க்கை வாழும் மக்களின் பாதுகாப்பின் நிலை குறித்தும் கேள்வி எழுப்பப்படுகின்றது. 

எனவே, இவ்வறானதொரு நிலையை போக்க தற்போது தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அரசாங்கம் அதீத கவனம் செலுத்த வேண்டியுள்ளது. 

ஆகையால், இது தொடர்பில் நீதியமைச்சு உரிய மற்றும் உடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு நீதிமன்ற வளாகங்களின் பாதுகாப்பு பலப்படுத்தவதோடு மக்களின் பாதுகாப்பு குறித்த உறுதிப்பாட்டையும் எட்ட வேண்டியது அவசியம் என்பதுடன் அதுவே நாட்டின் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கும் வகையில் அமையும் என தெரிவிக்கப்படுகின்றது. 

நாட்டின் தேசிய பாதுகாப்பு என்ற ஒரு விடயம் ஆட்சி மாற்றத்திற்கே வழிவகுத்தமையும் இலங்கையில் இடம்பெற்றிருக்கின்றது. எனவே இது, புதிதாக பதவியேற்றுள்ள அரசாங்கம் அதீத கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

இலங்கையை இன்று உலுக்கிய படுகொலையின் பின்னணியில் பெண் - பெண் தொடர்பான தகவல்

இலங்கையை இன்று உலுக்கிய படுகொலையின் பின்னணியில் பெண் - பெண் தொடர்பான தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரம்: விரைவில் புதிய சட்டம் நடைமுறை

கணேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரம்: விரைவில் புதிய சட்டம் நடைமுறை

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேக நபர் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேக நபர் கைது

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Sajithra அவரால் எழுதப்பட்டு, 19 February, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்புத்துறை, கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Villejuif, France

09 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, சிட்னி, Australia, Thun, Switzerland

08 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Horsens, Denmark

23 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Scarborough, Canada

25 Jan, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Washington, United States

19 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

26 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Bremgarten, Switzerland

24 Jan, 2026
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, பிரான்ஸ், France, London, United Kingdom

26 Jan, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

28 Jan, 2024
அந்தியேட்டிக் கிரியையும், 31ம் நாள் நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, பேர்ண், Switzerland

30 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு

05 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி கல்வயல், சுண்டிக்குளி

25 Jan, 2026
மரண அறிவித்தல்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

25 Jan, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US