நீதிமன்ற படுகொலையில் சிக்கிய முன்னாள் இராணுவ புலனாய்வாளர்! உடைக்கப்படும் இரகசியங்கள்
கடந்த 19ஆம் திகதி புதுக்கடை நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டிற்குள் வைத்து பாதாள உலகக் குழு தலைவர்களுள் ஒருவரான கணேமுல்ல சஞ்சீவ, சட்டத்தரணி வேடம் தரித்து வந்த சந்தேகநபரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
துப்பாக்கிச் சூட்டினை நடத்திய பிரதான சந்தேகநபர் 8 மணித்தியாலங்களுக்குள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டாலும், உடந்தையாக செயற்பட்ட செவ்வந்தி என்றப் பெண்ணை இதுவரை கைது செய்ய முடியவில்லை.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டினை நடத்திய பிரதான சந்தேகநபரான முன்னாள் இராணுவ புலனாய்வாளரின் வரலாற்றை தேடி படித்த போது அந்த வரலாறு மிக மோசமாக உள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “அவர் இந்த கொலை மட்டுமன்றி பல கொலைகளில் அவர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கையிலுள்ள இராணுவ கட்டமைப்பு மற்றும் பொலிஸ் கட்டடைப்புகள் இனவாத அடிப்படையில் வளர்க்கப்பட்டதால் அவர்களுக்கு இதெல்லாம் இலகுவான விடயம்
அவர் இராணுவ புலனாய்விலிருந்து வெளியேற்றப்படவில்லை, அவ்வாறு பொய்யாக கூறப்படுகின்றது
இந்த அரசாங்கமும் பாதாள குழுக்களை பாதுகாக்கின்றது” என்றார்.
இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில் விரிவாக அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மாஸ் வரவேற்பு பெற்றுள்ள டிராகன் படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புகழ் ஷாலினி புதிய தொடரில் கமிட்டாகியுள்ளாரா? வைரலாகும் போட்டோ Cineulagam

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri

விஜய் டிவியை தொடர்ந்து வேறொரு தொலைக்காட்சியின் சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ஷோபனா.. முழு விவரம் Cineulagam

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri
