சஞ்சீவ படுகொலை விவகாரம்.. நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு
கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படும் 25 மற்றும் 35ஆவது சந்தேக நபர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (21) நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.
விசாரணைக்கு இரண்டு சந்தேக நபர்களின் வாக்குமூலங்கள் தேவை என்று கூறி கொழும்பு குற்றப்பிரிவு மேலும் 'பி' அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்றில் முன்னிலை
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 5 சந்தேக நபர்கள் பூசா சிறைச்சாலையிலிருந்து ஸ்கைப் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டனர்.

பதினைந்தாவது சந்தேக நபரான இஷார செவ்வந்தி தப்பிச் செல்ல உதவியதாகவும் கூறி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 3 சந்தேக நபர்களையும் 2 சந்தேக நபர்களையும் சிறைச்சாலை அதிகாரிகள் திறந்த நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தியுள்ளனர்.
மேலும், சம்பவத்தில் தொடர்புடைய 9 முக்கிய சந்தேக நபர்களும் 28 முதல் 36 வரையிலான சந்தேக நபர்களாக பெயரிடப்படுவார்கள் என்று கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
இந்நிலையிலேயே 25 மற்றும் 35ஆவது சந்தேக நபர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |