ஞானசார தேரர் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு நாட்டின் சட்டத்தின் பிரகாரம் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் விசேட அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை பேச்சாளர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் ஞானசார தேரர் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரர் விவகாரத்தில் விசேட ஏற்பாடுகள் எதுவும் மேற்கொளள்ப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சிறைச்சாலைகளில் சுமார் 63 பௌத்த தேரர்கள் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார். அவர்களும் இதே விதமாகவே நடத்தப்படுகின்றனர் என சுட்டிக்காட்டி உள்ளார்.
பௌத்த தேரர் ஒருவரின் காவி உடையை சிறைச்சாலை அதிகாரிகள் களைய முடியுமா பௌத்த பீடத்தின் அனுமதியின்றி அது சாத்தியமா? என ஊடகவியலாளர் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார் அந்த கேள்விக்கு பதில் அளிக்கும் போது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த விடயத்தை சுட்டிக்காட்டி உள்ளார்.
ஏற்கனவே 63 பௌத்த தேரர்கள் இதே விதமாக தண்டிக்கப்பட்டுள்ளார்கள் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிக்கின்றார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது இந்த பௌத்த தேரருக்கு மட்டும் விசேடமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை கிடையாது சிறைச்சாலைகள் சட்டத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காவி உடை களைவது தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் மாநாயக்க தேரர்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் பரிசீலனை செய்யப்படக் கூடும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.