ஞானசாரர் விவகாரத்தில் கம்மன்பில கிளப்பிய சர்ச்சை.. சிறை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்
வெலிக்கடை சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த கலகொட அத்தே ஞானசார தேரர், சிறை சீருடையை வலுக்கட்டாயமாக அணிய வைக்கப்பட்டார் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுகளை சிறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
அதிகாரிகள் திட்டவட்டம்
கடந்த 12ஆம் திகதி அன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய உதய கம்மன்பில, துறவி மற்றும் சிறை அதிகாரிகளின் எதிர்ப்புகளையும் மீறி, ஞானசார தேரர் சிறை சீருடையை வலுக்கட்டாயமாக அணிய வைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.

குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த சிறைச்சாலை ஆணையரும் ஊடகப் பேச்சாளருமான செனக பல்லேத்தண்ண, இந்த சம்பவம் தொடர்பாக சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு எந்தப் முறைப்பாடும் வரவில்லை என்று தெரிவித்தார்.
அத்தகைய சம்பவம் எதுவும் தனக்குத் தெரியாது என்றும், சிறை அதிகாரிகள் நிறுவப்பட்ட சிறை விதிமுறைகளின்படி செயல்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
“இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக எங்களுக்கு எந்த முறைப்பாடும் வரவில்லை. அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எங்களுக்குத் தெரியாது. நாங்கள் சிறை விதிமுறைகளைப் பின்பற்றுவதால், அப்படி ஒன்று நடப்பதற்கு வாய்ப்பில்லை” என்று அவர் கூறினார்.
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri