நெருக்கடியின் பின் உள்ள உண்மை கதை! இலங்கையின் மோசமான நிலை குறித்து தேரர் வெளியிடும் தகவல்கள்
அரசாங்கத்தை குற்றம்சாட்டும் அனேகமானவர்கள் நாட்டின் நெருக்கடியின் பின்னால் உள்ள உண்மை கதையை அறிந்து கொள்ளாதவர்கள் என ஒரே நாடு - ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுற்றுலாத்துறை மூலம் நாட்டிற்கு கிடைத்த 15 பில்லியன் அமெரிக்க டொலர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரும், கடந்த இரண்டு வருட கோவிட் காரணமாகவும் இல்லாமல்போயுள்ளது.
சுற்றுலாத்துறையின் வீழ்ச்சி நேரடியாக நாட்டின் பொருளாதாரத்தை பாதித்தது. கோவிட் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக கையிருப்பில் இருந்த டொலர்கள் செலவு செய்யப்பட்டன.
அரசாங்கத்தை குற்றம்சாட்டும் அனேகமானவர்கள் நாட்டின் நெருக்கடியின் பின்னால் உள்ள உண்மை கதையை அறிந்து கொள்ளாதவர்கள் என்பதை பார்க்க முடிகின்றது.
இதன் காரணமாக தற்போதைய விவகாரம் மேலும் குழப்பகரமானதாக மாறியுள்ளது. தனியொரு நபர் காரணமாகவே நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்துள்ளது என சில குழுக்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட நபரை துரத்தியடித்தால் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சரிசெய்யலாம் என ஏனைய குழுக்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலை தனியொரு நபர் தொடர்பானதில்லை அவரை குற்றம்சாட்டுவது அபத்தமானது என குறிப்பிட்டுள்ளார்.





பெண்கள் பிளான் எல்லாம் சுக்குநூறாக போகிறது, தர்ஷனை காப்பாற்றுவது எப்படி.. எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

அதிக அளவில் நஷ்டம்.., தான் விளைவித்த காய்கறியை வைத்து 10 ரூபாய்க்கு வெஜ் பிரியாணி வழங்கும் விவசாயி News Lankasri
