தந்தையொருவரின் விபரீத முடிவு - ஆபத்தான நிலையில் பிள்ளைகள் வைத்தியசாலையில் அனுமதி
கம்பளை - தெல்பிட்டிய செவன கிராமத்தில் தந்தையொவர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் இனிப்பு குளிர்பானத்தில் விஷத்தினை கலந்து கொடுத்து தானும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கம்பளை - தெல்பிட்டிய செவனக் கிராமத்தில் 7 ஆம் திகதி இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது 4 வயது ஆண் பிள்ளையும், 7 மற்றும் 13 வயதுகளுடைய இரு பெண் பிள்ளைகளும், 40 வயதான தந்தையுமே விஷமருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபரீத முடிவிற்கான காரணம்
கணவன் மனைவிக்கிடையே நிலவிய குடும்ப பிரச்சினை இந்த தவறான முடிவிற்கு காரணமாக இருக்கலாம் எனவும், சம்பவத்தின் போது மனைவி வீட்டிலிருந்து வெளியேறியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தனது தந்தை,தம்பி,தங்கை ஆகியோர் தொடர்ந்து வாந்தியெடுத்துக்கொண்டிருந்ததை அவதானித்த 13 வயது சிறுமி தனது பெரியப்பாவிடம் தெரிவித்ததையடுத்து நால்வரும் உடனடியாக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தவறான முடிவினை எடுப்பதற்கு முன்னர் தந்தை குடும்பத்துடன் எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்களை வெகு நேரமாக பார்த்து கொண்டிருந்ததாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.




