கம்பளை யுவதி படுகொலைக்கான காரணம் வெளியானது
கம்பளை எல்பிட்டிய பாத்திமா முனவ்வரா என்பவரின் பிரேதப் பரிசோதனையும் கண்டி தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சிவசுப்ரமணியத்தினால் இன்று (14) நடைபெற்றது.
கழுத்தை நெரித்ததால் தான் மரணம் என்றும், பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பளை வெலிகல்ல - எல்பிட்டிய பகுதியை சேர்ந்த 22 வயதான பாத்திமா முனவ்வரா படுகொலை செய்யப்பட்டமை அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
கடந்த வாரம் காணாமல் போயிருந்து யுவதியின் சடலம் நேற்று மீட்கப்பட்டு கண்டி தேசிய வைத்தியசாலையில் பிரதேச பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வைத்தியசாலையின் பிரதான சட்ட வைத்திய அதிகாரி சிவசுப்ரமணியம் பரிசோதனையை முன்னெடுத்திருந்தார்.
இதேவேளை யுவதியை கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று பொலிஸார் கம்பளை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது அவரை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள். JOIN NOW