கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு..!
பாதாள உலகக் கும்பலின் தலைவர் 'கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒஸ்மண்ட் குணசேகர எனப்படும் கம்பஹா ஒஸ்மண்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை இன்று(14.05.2026) நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, 72 மணித்தியாலங்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
72 மணிநேரம் தடுப்பு காவல் விசாரணை
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், நேற்று(13) கம்பஹா, ஸ்ரீ போதி வீதி பகுதியில் வைத்து கம்பஹா ஒஸ்மண்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர்,கணேமுல்ல சஞ்சீவ என்பவரைத் திட்டமிட்டு கொலை செய்ய முயன்றமைக்கு உடந்தையாக இருந்து துப்பாக்கிகளை வழங்கியமை மற்றும் ஏனைய உதவிகளை வழங்கியமை தொடர்பில் விசாரணையில் தெரியவந்ததையடுத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.