உறக்கத்தில் இருந்த குடும்பஸ்தர் கோடரியால் வெட்டிப் படுகொலை
கோடரியால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொடூர சம்பவம் நேற்று புதன்கிழமை அதிகாலை கம்பஹா - மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இக்கொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர் பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இருவருக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இக்கொலை இடம்பெற்றுள்ளது என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தனது வீட்டின் மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தவரைக் கோடரியால் தாக்கி இந்தக் கொடூரக் கொலையைப் புரிந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உக்ரைன் தலைநகர் மேல் வெடித்த ரஷ்ய ஏவுகணைகள்- விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட காட்சி News Lankasri