கம்பஹா துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவர்களுக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் விசாரணை
கம்பஹா - அகரவிட்ட பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தவர்களுக்கு அநாமதேய தொலைபேசி அழைப்புகள் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மோட்டார்சைக்கிளில் பிரவேசித்த இரண்டு பேர் கம்பஹா அகரவிட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பி சென்றனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில்
இந்த சம்பவத்தில் மோட்டார்சைக்கிள் உதிரிபாகங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தை சேர்ந்த இருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இருவரும் கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவத்தில் கடுகஸ்தர மற்றும் யக்கல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே காயமடைந்தனர்.
இவ்வாறான சூழலில் தொலைபேசி அழைப்புக்களினூடாக வந்த அச்சுறுத்தல் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிரு்நத நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
