நெருக்கடியான கட்டத்தில் கம்பஹா மாவட்டம் - பாரியளவு கோவிட் தொற்றாளர்களால் சிக்கல்
கம்பஹா மாவட்டத்தில் எதிர்வரும் 2 வாரத்தில் எதிர்பாராத அளவு கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் சளிக்கு சிகிச்சை பெறுதற்காக வந்த நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனையில் 80 வீதமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் வைத்தியசாலை கட்டமைப்பு அவதானமிக்க நிலைமையில் உள்ளது. அந்த நிலைமையை மாற்றுவதற்கு உடடியாக திட்டமிட்டு செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளளார்.
அந்த மாவட்டத்தில் உள்ள ஆபத்தான நிலையில் இல்லாத கொரோனான தொற்றாளர்களை வீட்டிலேயே வைத்து வைத்திய கண்கானிப்பின் கீழ் சிகிச்சை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.