நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டின் மீது கொள்கலன் பாரவூர்தி மோதி விபத்து
நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொடவின் வீட்டின் மீது கொள்கலன் பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து காரணமாக வீட்டுக்கு பலத்த சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினரின் பலாங்கொட மிரிஸ்ஸவத்த வீதியில் அமைந்துள்ள வீட்டின் மீது இவ்வாறு வாகனம் மோதுண்டுள்ளது.

விபத்து
வீதியில் பயணம் செய்து கொண்டிருந்த கொள்கலன் பாரவூர்தி இவ்வாறு வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு உயிர் ஆபத்தோ காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் இடம்பெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

குறித்த வாகனம் மோதுண்ட வேளையில் நாடாளுமன்ற உறுப்பினர் அந்த இடத்தில் இருந்திருந்தால் ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam