முல்லைத்தீவில் ஏடிஎம் அட்டையை களவெடுத்து ஒன்றரை இலட்சத்திற்கு குடித்து செலவளித்த நபர்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நண்பரின் ஏடிஎம் அட்டையை திருடி, ஒரே நாளில் ஒன்றரை இலட்சம் ரூபாவை மதுபான சாலைகளில் செலவழித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வள்ளிபுனம் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட நபர் கடந்த 19ஆம் திகதி புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
மே மாதம் 17 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பணியாற்றிய ஒருவரின் பையில் இருந்த ஏ.ரி.எம் அட்டை திருடு போயுள்ளது.
ஏ.ரி.எம் அட்டையினை திருடிய நபர் கடந்த 18 ஆம் திகதி ஒருநாளில் புதுக்குடியிருப்பில் உள்ள மதுபானசாலை மற்றும் வட்டுவாகலில் உள்ள மதுபான சாலையில் நண்பர்களுடன் மதுபானம் அருந்து சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாவினை செலவு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரையும், ஏ.ரி.எம் அட்டையை பயன்படுத்தியதாக கூறப்படும் நபரையும் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைக்காக அழைத்துள்ளனர்.
இதன்போது, செலவழிக்கப்பட்ட பணத்தை மீண்டும் வழங்குவதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளதாகவும், அதனை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், கடந்த இரண்டு நாட்களாக பணத்தை பெற்றுத்தருவதாக பொலிஸார் தெரிவித்த போதிலும், இதுவரை தமக்கு பணம் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட நபர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம் News Lankasri
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam