பிள்ளைகளை பெற்றோர் மனித கேடயங்களாக பயன்படுத்தினார்களா..! ஆரம்பிக்கப்பட்டது விசாரணை
கொழும்பு - காலிமுகத்திடலில் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பிள்ளைகளை பெற்றோர் மனித கேடயங்களாக பயன்படுத்தினார்களா என்பது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
விசாரணை ஆரம்பம்
பொலிஸார், சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டனரா என்பது குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பெற்றோர், வேண்டுமென்றே பிள்ளைகளை ஆபத்தில் ஆழ்த்தினார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரியவருகிறது.
சர்வதேச சட்டங்களை மீறும் நடவடிக்கை
சிலர் சிறுவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியுள்ளதாக தென்படுகின்றது எனவும், இது சர்வதேச சட்டங்களை மீறும் வகையிலானது எனவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 9ம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறைகளில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் துன்புறுத்தப்பட்டமை குறித்தும் விரிவான விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.



காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 15 மணி நேரம் முன்

பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, ரூட்டை மாற்றிய பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன்... வைரலாகும் வீடியோ Cineulagam
