காலிமுகத்திடல் போராட்டம்! வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை தொடர்பில் வெளியான தகவல் (Video)
காலிமுகத்திடலில் நேற்றைய தினம் பதிவாகிய பதற்ற நிலைமையின் போது பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
குழந்தையின் உடல் நிலை
அதன்படி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்று குறித்த குழந்தை அனுமதிக்கப்பட்டது.
இதனையடுத்து இரண்டு வைத்தியர்கள் குழந்தைக்கு பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது குழந்தைக்கு வெளிப்புற அல்லது உள் மருத்துவ நிலைமைகள் தொடர்பில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
ஆனால் குழந்தைக்கு எவ்விதமான பாதிப்புகளும் இல்லை. எவ்விதமான நோய் அறிகுறிகளும் இல்லாத காரணத்தினால் வைத்தியசாலையில் இருந்து குழந்தையை வீடு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர்கள் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும். இவ்வாறு ஆபத்தான இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
காலிமுகத்திடலில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பலர் கைது செய்யப்பட்டதையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.





ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 18 மணி நேரம் முன்

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri
