காலி முகத்திடல் போராட்டக் களத்தில் பலரின் கவனத்தை ஈர்த்த வெளிநாட்டுக் குழந்தை (Video)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் எனக் கோரி நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இலங்கையில் மாத்திரம் அல்லாது பல வெளிநாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அது மாத்திரம் அல்லாமல் இலங்கையில் நடைபெறும் போராட்டங்களிலும் பல்வேறு வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்றையதினம் காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நடைபெற்ற போராட்டத்தின் போது வெளிநாட்டுக் குழந்தை ஒன்று கலந்து கொண்டிருந்ததுடன் இலங்கையின் தேசியக் கொடியை கையில் ஏந்திய நிலையில் “ கோ ஹோம் கோட்டா” என கூச்சலிட்டமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதேவேளை, இன்று காலி முகத்திடல் போராட்டத்தில் கலந்து கொள்ள பல்கலை மாணவர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பொலிஸாரின் தடைகளையும் தாண்டி கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.