விண்ணதிரும் கோஷங்களுடன் கோட்டா கோ கமவிற்கு வாகன ஊர்வலமாக அழைத்துவரப்பட்ட 13 பேர் (PHOTOS)
பொல்துவ சந்தியில் உள்ள நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டவர்கள் இன்றிரவு காலிமுகத்திடல் போராட்ட பகுதிக்கு வாகன ஊர்வலமாக அழைத்துவரப்பட்டுள்ளனர்.
பொல்துவ சந்தியில் உள்ள நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், ஆண்கள் என 12 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இவர்கள் அரசுக்கு எதிராக காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்ட பகுதிக்கு வாகன ஊர்வலமாக அழைத்துவரப்பட்டுள்ளதுடன்,காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எதிர்நீச்சல் பார்வதி நடித்து வந்த சூப்பர்ஹிட் தொடர் முடிவுக்கு வந்தது... கடைசி நாள் வீடியோ இதோ Cineulagam
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri