"கோட்டாகோகம" வில் புத்தாண்டு விளையாட்டுக்கள் - நள்ளிரவில் பானை உடைத்து கொண்டாடிய போராட்டகாரர்கள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக இலங்கை இளைஞர்கள் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டம் தொடர்ந்து 5வது நாளாகத் தொடர்ந்துள்ளது.
கொழும்பில் தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்ற போதிலும் பல ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில், "கோட்டாகோகம" வில் சித்திரை புத்தாண்டு விளையாட்டுக்கள் ஆரம்பமாகியுள்ளன.
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ள போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர், யுவதிகள் அந்த பகுதிக்கு "கோட்டாகோகம" என பெயர்சூட்டியுள்ளனர்.
இந்நிலையிலேயே, குறித்த பகுதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் போது ராஜபக்சக்களின் படங்கள் ஒட்டப்பட்டு பானைகள் உடைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Avurudu Krida begins at "GotagoGama" #OccupyGalleFace protest site in Colombo pic.twitter.com/zE8DecCpLS
— NewsWire ?? (@NewsWireLK) April 12, 2022

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan
