வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்! கனேடிய உயர்ஸ்தானிகர் வேண்டுகோள்
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான வன்முறை தவிர்க்கப்பட வேண்டும் என்று இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் David McKinnon வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டக்காரர்களை இராணுவத்தினரைக் கொண்டு அகற்றப்பட்டமை தொடர்பில் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் David McKinnon கண்டனம் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றினையிட்டு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் நடைபெறும் விடயங்கள் குறித்து அறிந்தேன். தற்போது இது ஏன் நடைபெறுகின்றது என்று அறியேன். அதிகாரிகள் பொறுமையுடனும், வன்முறைகளைத் தவிர்த்தும் நடந்து கொள்வது மிகவும் நன்று என்றும் David McKinnon தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hearing what is happening at the Galle Face protest site. Not sure why this is happening now. It is crucial the authorities act with restraint and avoid violence.
— David McKinnon (@McKinnonDavid) July 21, 2022