காலிமுகத்திடலில் அய்யா சுனாமி! மல்லி கொரோனா இசை கோசம்! அர்த்தம் தேடும் இளம் தலைமுறையினர்!
இலங்கையின் அரசியல் நெருக்குவார நிலை விரைவில் தீரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது பதவி நீக்கங்களுடன் தீர்க்கப்படுமா? பதவி விலகல்களுடன் தீர்க்கப்படுமா? அல்லது பௌத்த பிக்குகளின் பிரகடனத்துடன் தீர்க்கப்படுமா? இல்லையேல் விடாப்பிடியினால் சர்வதேச தலையீட்டால் தீர்க்கப்படுமா என்பது அவ்வப்போது ஏற்படுகின்ற நிலைமைகளை பொறுத்தது.
எனினும் இது விட்டுக்கொடுப்புக்களால் அன்றி காலிமுகத்திடல் போராட்டத்தின் விளைவாகவே இடம்பெறும் என்பது அனைவருக்கும் வெளிச்சம்.
நேற்று காலி முகத்திடலுக்கு செல்லவிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் இறுதியில் அவர்களை அங்கு அனுமதிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
இது போராட்டங்களின் தாக்கங்களை அரசாங்கம் தாங்கிக்கொள்ளும் நிலையில் இல்லை என்பதையே காட்டுகிறது.
இதற்கு காரணம், ஏற்கனவே சர்வதேச நாணய நிதியப் பேச்சுவார்த்தைகளின்போது அரசாங்கம், றம்புக்கனை துப்பாக்கி சூட்டு சம்பவம் மூலம் பெற்றுக்கொண்டஅனுபவமாக இருக்கலாம்.
எனவே யதார்த்ததுக்கு உட்பட்ட அரசாங்கம் விட்டுக்கொடுப்பது என்றில்லாமல், கீழிறங்கி வரும் நிர்க்கதி நிலைக்கு உள்ளாகியுள்ளது என்றே கூறலாம்.
காலி முகத்திடலில் உள்ள தடுப்பு வேலியில் காவலர் ஒருவருக்கு சிவப்பு மலரைக் கொடுத்த இளம் பெண் முதல், 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு அன்று தாக்குதல்களின் தளங்களில் ஒன்றான கட்டுவாப்பிட்டியில் இருந்து முதுகில் சிலுவையுடன் நடந்து வந்தவர் வரை. , கொழும்பில் போராட்ட களம் தீவிரமாகியுள்ளது.
அரசாங்கம் மேலும் தாமதித்தால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் போகும்.
மக்களின் கோரிக்கைகளுக்கு செவிகொடுப்பதை நிறுத்திவிட்ட அரசாங்கத்தின் கட்டளைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
இதற்காக எதிர்ப்பும், வன்முறையற்ற கீழ்ப்படியாமையும் அமைதியான போராட்டக்காரர்கள் தங்கள் ஆயுதக் களஞ்சியத்தில் வைத்திருக்கும் மிக முக்கியமான ஆயுதங்களாகும்.
இந்தியாவில் காந்தியப் போராட்டங்கள் முதல் வியட்நாம் போர் மற்றும் அமெரிக்காவில் ஜோர்ஜ் ஃபிலாய்ட் போராட்டம் வரை இவ்வாறான நிகழ்வுகளே இடம்பெற்றிருக்கின்றன.
வியட்நாம் போர் எதிர்ப்புப் போராட்டங்கள், இசையையும் கலையையும் ஆயுதங்களாகப் பயன்படுத்தின.
இதுவே இன்று காலிமுகத்திடலிலும் இடம்பெறுகிறது. இளைஞர்கள் இசை கலந்த நிலையில் தமது போராட்டங்களை முன்கொண்டு செல்கின்றனர்
இதில் அய்யா சுனாமி! மல்லி கொரோனா! என்ற கோசம் இளம் தலைமுறையினர் பலருக்கு புரியவில்லை.
2004ஆம் ஆண்டு ஆழிப்பேரலை நிவாரண நிதியை முறைகேடு செய்ததாக மஹிந்த ராஜபக்ச(அய்யா) மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
பின்னர் அது மறுக்கப்பட்டது
அதேபோன்று கொரோனா தடுப்பூசிகள் 10 டொலருக்கு 15 டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டதாக (பின்னர் அது மறுக்கப்பட்டது) கோட்டாவின்(மல்லி) மீது மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதன் பின்னணியிலேயே இந்த கோசம் எழுப்பப்படுகிறது.
இதேவேளை இளைஞர்களின் எதிர்ப்புகள் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் பாடம் கற்பிப்பது போன்று அமைந்துள்ளதை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
எனவே போராட்டங்களுக்கு உரிய பதில் தரப்படுவது அவசியம். இல்லையேல், இலங்கை தோல்வியடைந்த நாடு என்ற கேவலத்தை தேடித்தந்தவர்கள் என்ற பட்டத்தை அரசாங்கத்தரப்பினரும் எதிர்கட்சியினரும் பொறுப்பேற்கவேண்டியிருக்கும்.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
