காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்களத்தில் ஏந்திய தேசியக்கொடி தமிழ் மக்களுக்கு எதிரானது! அருட்தந்தை சக்திவேல் (VIDEO)
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்களத்தில் போராட்டக்காரர்கள் ஏந்திய தேசியக்கொடி தமிழ் மக்களுக்கு எதிரானது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
அதாவது தேசியக்கொடி என்பது சிறுபான்மை மக்களுக்கு எதிரானது.அவற்றில் சமத்துவம் காணப்படவில்லை. பெரும்பான்மையான சிங்கள பௌத்த ஆதிக்கமே காணப்பட்டது.
எனவே இலங்கை அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது என்பதினை தமிழ் மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
ராஜபக்சக்களின் கோட்டைக்குள் இருந்தவாறே தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சி செய்து வருகின்றார்.
அதாவது கொள்ளையடித்து பழகியவர்களும்,ஆட்சி கதிரையில் அமர்ந்து பழகியவர்களும் எப்போதும் அரசியலை விட்டு விலகமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.