காலிமுகத்திடல் பகுதியில் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால் ஆத்திரமடையும் மக்கள் (Video)
நாடளாவிய ரீதியில் நடைபெறும் கா.பொ.த உயர்தர பரீட்சை நேரத்தில் கூட மின்வெட்டை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.
ஆனால் பொறுப்பற்ற அதிகாரிகளின் செயற்பாடுகள் காரணமாக காலிமுகத்திடல் பகுதியில் பட்டப்பகலில் மின்விளக்குகள் ஒளிரச் செய்யப்படுகின்றது.
அத்துடன், எதிர்வரும் சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளும் இப்பகுதியில் முன்னெடுக்கப்படுகின்றது.
இது தொடர்பில் எமது செய்தி சேவை ஆராய்தபோது " அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலே நாட்டின் தற்போதைய நிலைக்கு காரணம் எனவும், எமக்கு சுதந்திர கொண்டாட்டங்கள் தேவையே இல்லையென" தெரிவித்து மக்கள் மிகவும் ஆத்திரமடைந்து தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
அவை தொடர்பான முழுமையாக தகவல்களை இக்காணொளியில் காணலாம்,

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
