காலி முகத்திடல் தாக்குதல் விவகாரம்: மூவருக்கு எதிராக பிடியாணை
காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்பாட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
டான் பிரசாத், மகிந்த காந்தகம உள்ளிட்ட மூவருக்கு எதிராக இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மூன்று சந்தேகநபர்கள்
இந்த சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மிலன் ஜயதிலக்க உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ள போதிலும், மேற்கூறிய மூன்று சந்தேகநபர்களும் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்கள் வெளிநாட்டில் இருப்பதாக சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை, மேற்படி சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில், வழக்கை 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதி மீள அழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |