நாடாளுமன்றத்தில் கோவிட் தொற்றுடன் இரண்டு நாட்கள் நடமாடியுள்ள உறுப்பினர்
கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இரண்டு தினங்கள் நாடாளுமன்றத்திற்கு சென்று சில இடங்களில் நடமாடியுள்ளதாக சீ.சீ.டி.வி காட்சிகள் மூலம் நடத்தப்பட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ (Narendra Fernando) தெரிவித்துள்ளார்.
எனினும் அவர் முகக்கவசம் அணிந்து சுகாதார சட்டத்திட்டங்களை சரியாக பின்பற்றி நடந்துக்கொண்டுள்ளதால், அவரால் நாடாளுமன்றத்திற்கு பெரிய அச்சுறுத்தல் இல்லை என தெரிவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவர் நாடாளுமன்றத்திற்கு வந்த நேரத்தில் சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரமே பழகியுள்ளார்.
அதேவேளை, செல்வராசா கஜேந்திரன், இரண்டு கோவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
கஜேந்திரனுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று கண்டறியப்பட்டது. அவர் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கஜேந்திரன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri