தமிழக முதலமைச்சரை சந்தித்த தமிழ் தேசிய பேரவை!
யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகம் சென்ற தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளின் பிரமுகர்கள் இன்றையதினம்(18.12.2025) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் நிறைவேற்றப்படவுள்ள ஈழத்தமிழர்களின் நலன்களுக்கு எதிரான ஏக்கியராஜ்ய அரசியலமைப்பைத் தடுத்து நிறுத்துவதற்காக இந்திய அரசினூடாக அழுத்தங்களை வழங்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம்.
கடற்றொழிலாளர்களின் அவலங்களுக்கு
ஈழத்தமிழ்க் கடற்றொழிலாளர்களின் அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று அவரிடம் கோரினோம்.

எம்மால் கையளிக்கப்பட்ட அறிக்கையை விரைவில் மக்களுக்குப் பகிரங்கப்படுத்துவோம். மேலும், சந்திப்புகள் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடற்றொழிலாளர்கள் பிரச்சினை
மேலும், பொருளாதார ரீதியாகப் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ள இலங்கை அரசாங்கம் இந்தியாவின் பங்களிப்பின்றி வளர்ச்சியடைய முடியாது. தமிழகத்தோடு பொருளாதார ரீதியில் நெருக்கமான உறவையும் தொடர்பாடலையும் உருவாக்காமல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியென்பதும் பாரிய சவாலாகவே இருக்கும்.

இதன் பின்னனியில் இலங்கையின் மீது கணிசமான அழுத்தத்தை ஏற்படுத்தி, தமிழர்கள் விரும்பும் தீர்வை இந்தியாவினால் சாத்தியமாக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.
அத்தோடு, தமிழக மற்றும் ஈழக் கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாகவும் உரையாடி இருந்தார்கள். நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் தமிழக கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டும் பிரச்சினையை இலங்கை அரசு தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி தமிழகத்தையும் ஈழத் தமிழர்களையும் நிரந்தரப் பகையாளிகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்றும், இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி இந்திய நலன்களுக்கு முரணான வெளிச்சக்திகள் இலங்கையில் காலூன்றி வருவதனையும் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
தமிழ்த் தேசியப் பேரவை
எல்லை தாண்டிய மீன்பிடியைக் கட்டுப்படுத்தி இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக்காணத் தமிழக அரசு தலையிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள்
சந்திப்பின் முடிவில் தமிழ்த்தேசியப் பேரவையின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதிய அரசியல் அமைப்புத் தொடர்பாகவும் தமிழக கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டும் பிரச்சினை தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்ராலினிடம் தனித்தனியான கோரிக்கைக் கடிதங்களைக் கையளித்தார்.

முதலமைச்சரின் சந்திப்பின் பின்னர் ஏனைய கட்சிகளின் தலைவர்களையும் விரைவில் சந்திக்கவிருப்பதாகத் தமிழ்த் தேசியப் பேரவையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின்போது இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவனும் கலந்துகொண்டிருந்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam