எங்கள் ஆதரவுகளை பல தரப்புக்கள் நாடுகின்றனர்! கஜேந்திரகுமார் எம்.பி
தம்பலகாம் பிரதேச சபை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் சபைகளை அமைக்க பல சபைகளில் தொங்கு நிலை காணப்படுகின்ற இடத்தில் எங்களுடைய ஆதரவை நாடி பல தரப்புக்கள் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தம்பலகாமம் பகுதியில் நேற்று (17) மாலை இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அடுத்து கஞ்சி பகிரும் நடவடிக்கை இடம் பெற்றது.அதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அந்த வகையில் அந்த விடயங்களை நேரடியாக இங்கு இருக்கக் கூடிய மக்களுடன் பேசி அவர்களுடைய கருத்துக்களையும் பெற்று தமிழ் தேசிய பேரவையின் மத்திய குழுவுடன் தீர்மானிக்கவுள்ளோம்.
இனப்படுகொலை
தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலையின் கடைசி நாளுக்கு முந்தைய நாள்.அந்த வகையில் இவ்வாரம் முழுவதும் தமிழர் தாயக நிலப் பரப்பில் ஒரு சோகமான வாரமாக கடைப் பிடித்து முள்ளி வாய்க்காலில் நடைபெற்ற பொருளாதார பொருள் தடைகள் அனைத்து விதமான தடைகளையும் மீறி அந்த மக்கள் ஏதோ ஒரு வகையில் உயிரை தக்க வைக்க கஞ்சி குடித்ததன் ஊடாக அது மட்டும் தான் அவர்களுக்கு உணவாக இருந்தது.
அந்த வகையில் இனப் படுகொலையின் நினைவாக இவ்வாரம் முழுவதும் வடகிழக்கில் உள்ள தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்த்து எங்கள் மக்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம் முல்லைத்தீவு முள்ளி வாய்க்காலில் நடைபெற்றதை போன்று மிக மோசமான நிலைமை தென் தமிழ் தேசத்திலும் கிழக்கு மாகாணத்திலும் நடைபெற்றது.
இதனை ஒவ்வொரு வருடமும் அந்த நினைவாக வாகரையில் நினைவு கூறுவது வழக்கம். இதனை எமது கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனுடன் நிறைவேற்றுவதும் வழமை எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



